எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! |
கடந்த 2010ல் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்த ‛மங்காத்தா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பில்லாவை தொடர்ந்து அஜித்தின் திரையுலக பயணத்தில் இது மீண்டும் ஒரு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அது அவரின் 50வது படமும் கூட. இந்த படத்தில் இருவருமே நெகட்டிவ் ஹீரோக்களாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றனர். குறிப்பாக அஜித் ரசிகர்களிடம் இந்த இருவரின் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது அஜித்-அர்ஜுன் இருவரும் சந்தித்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்கிற ஒரு செய்தியும் பரவ ஆரம்பித்துள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் (நவ-20) கொண்டாட்டத்தை முன்னிட்டு தான் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
அஜித்துக்கு ஷாலினி அறிமுகமாவதற்கு பல வருடங்களுக்கு முன்பே சங்கர் குரு படத்தில் அர்ஜுனுடன் குழந்தை நட்சத்திரமாக இணைந்து நடித்திருந்தார் ஷாலினி. அந்தவகையில் தனக்கு எப்போதுமே செல்லப்பிள்ளையான ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு நடைபெற்ற ஹோட்டலில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலரும் அஜித், அர்ஜுன் இருவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்கின்றன.