நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்த லலித்குமார் தமிழக வினியோக உரிமை வாங்கி வெளியிடுகிறார். மிகப் பெரும் விலைக்கு அவர் படத்தை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒட்டு மொத்த தமிழக உரிமையை வாங்கியுள்ளவர் அதை ஏரியா வாரியாக பிரித்து விற்பனை செய்து வருகிறார்.
முக்கிய ஏரியாக்களான சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, கோவை ஆகிய வினியோக ஏரியாக்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த ஏரியாக்கள் எவ்வளவுக்கு விற்கப்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் கசியவில்லை.
திருச்சி, திருநெல்வேலி ஏரியாக்களை எம்ஜி அடிப்படையில் சுமார் 11 கோடிக்கு விற்றுள்ளார்களாம். மதுரை ஏரியா உரிமை 8 கோடி, சேலம் ஏரியா உரிமை 6 கோடி என பேசி வருகிறார்களாம். இவ்வளவு விலை கொடுத்து வாங்க அந்த ஏரியா வினியோகஸ்தர்கள் தயங்கி வருவதாகத் தகவல்.
விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'மாஸ்டர்' படத்தின் விலையை விட 'வாரிசு' படத்தின் உரிமை அதிகமாக சொல்லப்படுகிறதாம். அதனால் சில ஏரியாக்களில் இன்னும் பேச்சும் வார்த்தை தொடர்ந்து வருகிறது. யாரும் வாங்க முன்வரவில்லை என்றால் தமிழக உரிமையை வாங்கியுள்ள லலித்குமாரே சொந்தமாக வெளியிடும் முடிவில் இருக்கிறாராம்.