சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா திரைப்படம் கடந்த நவ.,11ல் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா வெளியீட்டான இந்த படம் 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: அன்பான பார்வையாளர்களே, யசோதாவின் மீதான உங்கள் பாராட்டும் அன்பும்தான் நான் கேட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய பரிசும் ஆதரவும். நான் மகிழ்ச்சியினாலும் நன்றியினாலும் மூழ்கியிருக்கிறேன். யசோதா குழுவினர் உழைத்த அத்தனை உழைப்பும் பலனளித்தது என்பதற்கு உங்கள் விசில் சத்தம் கேட்பதும், தியேட்டர்களில் நடந்த கொண்டாட்டங்களைப் பார்ப்பதும்தான் சான்று. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
யசோதா தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக தயாரிப்பாளர் கிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இயக்குநர் அவர்களுடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் அன்பான சக நடிகர்களான வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன் மற்றும் மற்ற அற்புதமான நடிகர்களுக்கு, உங்களுடன் இணைந்து பணியாற்றியதும் அருமையாக இருந்தது. எப்போதும் நன்றியுடனும் அன்புடனும்- சமந்தா. இவ்வாறு கூறியுள்ளார்.