2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் படம் தொடர்பான பணிகள் முடியும் இன்னும் கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுவதால் ரிலீஸ் தேதி தள்ளி போவதாக செய்திகள் வந்தன. அதன்படி இப்போது அடுத்தாண்டு பிப்ரவரி 17ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. புது போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.