ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ் திரையுலகில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அதாவது இவர்கள் திருமணம் நடைபெற்று நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலேயே தாங்கள் இரட்டைகுழந்தை பெற்றுள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் அறிவித்து பரபரப்பை கிளப்பினர். ஒரு பக்கம் இதுபற்றி சில விமர்சனங்கள் எழுந்தாலும் பெரும்பாலானோர் அவர்களின் இந்த முடிவை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா அவர்கள் வீட்டிற்கு நேரிலேயே சென்று இரட்டை குழந்தைகளை பார்த்துவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரின் காதலுக்கு அச்சாரம் போட்ட நானும் ரவுடி தான் படத்தில், இவர்கள் இணைந்து பணியாற்றிய போது, அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராதிகாவும் நடித்திருந்தார். இந்தநிலையில் தான் இவர்கள் வீட்டிற்கு அதிக உரிமையுடன் சென்று குழந்தைகளை பார்த்து விட்டு வந்துள்ளார் ராதிகா.