கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி குறித்து தான் அளித்த ஒரு பேட்டியில் நடிகை வனிதா விஜயகுமார் மிக கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் கூறுகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அத்தனை பேருமே மாமா வேலைதான் பார்க்கிறார்கள். இது பிக்பாஸ் வீடா அல்லது மாமா வீடா என்றே எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு ஒரு நெறிமுறையே இல்லாமல் பேசுவதற்கு கண்டன்ட் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மணிகண்டனிடம் அமுதவாணன் ரோஸ்டிங் டாஸ்கில் குயின்சியை நீ லவ் பண்றியா என்று கேட்கிறார். ஆனால் மணிகண்டனுக்கு வெளியில் ஒரு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். இது கூட தெரியாமல் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதோடு ராபர்ட்டுக்கு வெளியில் குடும்பம் இருக்கிறது. ஆனால் அவருக்கோ தனக்கு பொண்டாட்டி குழந்தைகள் இருக்கிறது என்ற கவலையே இல்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல், பிக்பாஸ் வீட்டுக்குள் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக ராபர்ட்டை பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும்போது என்கரேஜ் பண்ணி அனுப்பி வைத்தோம். ஆனால் அவர் ஒரு மட்டமான நபர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு ஓட்டு போடாதீர்கள், நான் இந்த வீட்டை விட்டு போய் விடுகிறேன் என்று கேமரா முன்பு சொல்கிறார் ராபர்ட் . அடுத்த நாள் கதிர், குயின்சியுடன் சேர்ந்து கொண்டு அடுத்து யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று இவர்கள் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். இதில் ராபர்ட் சொன்னதுதான் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர் சொல்கிறார், நான் பொண்ணுக்காகதான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே வந்தேன். நான் வாய்ப்பு தேடி வரவில்லை என்கிறார். வாய்ப்பைத் தேடிப் போகாமல் எதைத் தேடி இவர் போனார். இவர் எதை தேடி போனார் என்று எனக்கு தெரியும். ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கதை கதையாக விட்டபடி புருடா விட்டுக்கொண்டு திரிகிறார். இங்கே வெளியில் அவரது செயல்பாட்டை வைத்து அவரது குடும்பத்தினரை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொண்ணுக்காக போனேன், உறவுக்காக போனேன் , எனக்கு குயின்ஸி கிடைத்து விட்டாள் என்று கூறுகிறார். பொண்ணுக்காக போய்விட்டு பொண்ணு பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார். இப்படி இருந்தால் எந்த பொண்ணு இவரை மதிக்கும். முத்தம் கேட்கிறார். என் கிட்ட வா என்கிறார். இப்படி ஒரு ஷோ, அந்த அளவுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த கண்டெண்டும் இல்லை என்று அந்த வீடியோவில் ஆவேசமாக கொந்தளித்து இருக்கிறார் நடிகை வனிதா.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.