இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் கார்த்தி. தொடர்ந்து 'விருமன், பொன்னியின் செல்வன், சர்தார்' என வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் கார்த்தி.
அவருடைய பேஸ்புக் பக்கத்தை யாரோ சிலர் 'ஹேக்' செய்துள்ளார்கள். அது குறித்து டுவிட்டரில், “ஹலோ நண்பர்களே, என்னுடைய முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் குழுவுடன் அதை மீட்கும் முயற்சியில் இருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் 3.9 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள கார்த்தியின் முகநூல் பக்கத்தில் கடைசியாக சில மணி நேரங்களுக்கு முன்பு 'கார்த்தி' எனக் குறிப்பிட்டு கேம் வீடியோ ஒன்றை யாரோ பதிவிட்டிருக்கிறார்கள்.
பிரபலங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களை அடிக்கடி சிலர் ஹேக் செய்து வருகிறார்கள். அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தடுப்பதில்லை. பிரபலங்களாக இருந்தாலும் சமூக வலைத்தளப் பக்கங்கள் பாதுகாப்பற்றதாகத்தான் உள்ளது.