ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

தமிழ், தெலுங்கில் தனி கதாநாயகிகளாக ஒரு சில நடிகைகள்தான் நடித்து வருகிறார்கள். அதிலும் சில முன்னணி நடிகைகளுக்கு மட்டும்தான் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைக்கிறது. தமிழில் தனி கதாநாயகியாக நடித்தாலும் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. தெலுங்கில் அப்படி தனி கதாநாயகிகளின் படங்கள் அதிகம் வருவதில்லை.
சமந்தா நடித்து தெலுங்கில் தயாரான 'யசோதா' படம் தமிழிலும் டப்பிங் ஆகி இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. புதிய கதைக்களம், சமந்தா கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸ், அவரது நடிப்பு என படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஒரு படமாக அமைந்துவிட்டது. தமிழகத்தில் மழை காரணமாக வசூல் பாதிக்கப்பட்டாலும் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்துள்ளன. அதே சமயம், ஆந்திரா, தெலுங்கானாவில் படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபீசில் படம் வெற்றி பெற்றுவிடும் என்று பேசிக் கொள்கிறார்கள்.
சமந்தா தனி கதாநாயகியாக நடித்த முதல் படமான 'யு டர்ன்' தமிழ், தெலுங்கில் இரு மொழிப் படமாக வெளிவந்தாலும் தோல்வியைத் தழுவியது. அடுத்து அவர் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'ஓ பேபி' வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மூன்று வருடங்களுக்குப் பிறகு சமந்தா மீண்டும் தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள 'யசோதா' படமும் வெற்றிப் படமாக அமைய உள்ளது.