தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
பீஸ்ட், ஆச்சார்யா படங்களைத் தொடர்ந்து தற்போது ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. ஹிந்தியில் சல்மான்கான் உடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பூஜா ஹெக்டே காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் தனது காலில் அணிந்திருந்த ஸ்பிலின்டை நீக்கிவிட்டு சோபாவில் அமர்ந்தபடி ஒரு வாளியில் வைக்கப்பட்ட தண்ணீரில் தனது காலை வைத்தபடி தான் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் பூஜாஹெக்டே. அதோடு இந்த விபத்துக்கு பிறகு தினமும் என்னுடைய காலை இப்படித்தான் விடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பூஜா ஹெக்டேவுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சல்மான்கான் உடன் நடித்து வரும் கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் மற்றும் தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை பூஜா ஹெக்டே அல்லாத மற்ற நடிகர் நடிகைகளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.