ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
'திறந்திடு சிசே' படத்தை இயக்கிய எம். முத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'சிக்லெட்ஸ்'. இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சாத்விக் வர்மா கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். 'வலிமை' படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜாக் ராபின்சன் மற்றொரு நாயகராக நடித்திருக்கிறார்.
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் கூறியதாவது: 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகி இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் காதல் குறித்தும், காமம் குறித்தும் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும், இது தொடர்பாக அவர்களுடைய பெற்றோர்களின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள கருத்தியல் இடைவெளியை சுவாரசியமான சம்பவங்களுடன் சிக்லெட்ஸில் விவரித்திருக்கிறோம். என்கிறார்.