தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியாபட், ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சீதா என்ற வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஆலியா பட்டும், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார் ஆலியா பட். அதன் பிறகு அவ்வப்போது தான் கர்ப்பிணியாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து பாலிவுட் திரையுலகினரும், ரசிகர்களும் ஆலியாபட் -ரன்பீர் கபூருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.