ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தமிழ் சினிமாவில் தலைப்புப் பஞ்சம் எப்போதும் உண்டு. ஜிஎஸ்டி வருவதற்கு முன்னால் தமிழில் தலைப்புகளை வைக்கும் படங்களுக்கு மாநில அரசு வரி விலக்கு கொடுத்திருந்தது. ஆனால், சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி என்று வந்த பிறகு அந்த வரி விலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், ஆங்கிலம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் தமிழ்ப் படங்களுக்கு தலைப்புகளை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்து வெளிவந்த வெற்றிப் படங்களில் 1997ம் ஆண்டு வெளிவந்த 'லவ் டுடே' படம் முக்கியமான ஒரு வெற்றிப் படம். பாலசேகரன் இயக்கத்தில் ஷிவா இசையமைப்பில் விஜய், சுவலட்சுமி, மந்த்ரா, ரகுவரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்ற 'என்ன அழகு எத்தனை அழகு,' மற்றும் 'ஏன் பெண்ணென்று பிறந்தாய்' ஆகிய பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட்டானவை. இப்போதும் கேட்டு ரசிக்கலாம். அப்படம் பெரிய வெற்றி பெற்றதால் அப்படத்தை இயக்கிய பாலசேகரன் அப்போதெல்லாம் 'லவ் டுடே' பாலசேகரன் என்றே அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு தமிழில் 'துள்ளித் திரிந்த காலம், ஆர்யா,' ஆகிய படங்களை இயக்கினார். தெலுங்கிலும் சில படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு படத்தின் தலைப்பை அதன் இயக்குனர்கள்தான் எப்போதுமே வைப்பார்கள். அந்த விதத்தில் பாலசேகரன் வைத்த தலைப்புதான் 'லவ் டுடே'. அந்தத் தலைப்பை மீண்டும் பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரியிடமிருந்துதான் உரிமையைப் பெற்று இப்போது வைக்க முடியும். அப்படி பெற்று பிரதீப் ரங்கநாதன் இயக்கம், நடிப்பில் நேற்று முன்தினம் 'லவ் டுடே' படம் வெளிவந்து வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் டைட்டில் போடும் போது அதன் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, அப்படத்தின் கதாநாயகன் விஜய் ஆகியோருக்கு நன்றி எனப் போடுகிறார்கள். ஆனால், படத் தலைப்பை வைத்த இயக்குனர் பாலசேகரனுக்கு அந்த நன்றியைத் தெரிவிக்கவில்லை.
இது குறித்து அப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவரும், எழுத்தாளர், இயக்குனருமான அஜயன் பாலா அவரது பேஸ்புக்கில், “நேற்று லவ் டுடே 2022 பார்த்தேன். தியேட்டரில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். நடிகர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துக்கள். நேரடி ஆபாச வசனங்களை தவிர்த்து இருக்கலாம். படத்தில் டைட்டிலுக்கு நான் உதவியாளராக பணி புரிந்த விஜய் நடித்த லவ் டுடே படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிக்கு நன்றி சொன்ன இயக்குனர், கூடவே இயக்குனர் பால சேகரனுக்கும் ஒரு நன்றியை சொல்லியிருக்கலாம். விசாரித்த போது அவரிடம் இதுகுறித்து ஒரு மரியாதை நிமித்தம் கூட யாரும் அனுமதி கேட்கவில்லையாம். டேட்டா உலகில் இன்று தலைப்புதான் ஒரு படைப்பின் அடையாளம். பொதுவாக அவரை லவ் டுடே பாலசேகரன் என அழைப்பார்கள். இனி அப்படி அழைக்க தயங்குவார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.