100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் 'வாரிசு'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே…' பாடல் நேற்று மாலை யு டியுபில் வெளியானது. வெளியான ஒரு இரவில் இப்பாடல் ஒரு கோடி பார்வைகள், ஒரு மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது.
விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. அதனால், இந்த முதல் சிங்கிளில் வெளியீடு குறித்து அவர் ஆர்வத்துடன் காத்திருந்தார். பாடலும் அதிரடியாக இருந்ததால் விஜய்யின் அதி வேக நடனம், ராஷ்மிகாவின் கிளாமர், அரங்க அமைப்பு, நடன இயக்குனர் ஜானியின் வழக்கமான நடனம் என பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது. முந்தைய விஜய் படங்களின் சூப்பர் ஹிட் பாடல்களின் யூடியுப் சாதனையை இந்தப் பாடல் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் 'ரஞ்சிதமே' தமிழில் மட்டும்தான் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்குப் பாடல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.