அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? | ஒரேநாளில் மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் | அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி |
தெலுங்கில் முதல்முறையாக வம்சி பைடி பள்ளி இயக்கி உள்ள வாரிசு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் என்ட்ரியாகிறார் விஜய். வருகிற பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அதோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் குஷ்புவும் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛இந்த படத்தில் நான் ஒரு சிறிய சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் நடித்துள்ள காட்சிகள் விஜய்யுடன் இடம்பெற்றுள்ளன. ஆனபோதிலும் என்னுடைய கதாபாத்திரத்திற்கு எந்தப் பெயரும் வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் குஷ்பு.
1999ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தில் இந்திரா தேவி என்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தார் குஷ்பூ. அதன்பின் வில்லு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .