ஒரே நாளில் இரண்டு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சமந்தா | பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' |
கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 21ம் தேதி வெளிவந்த படம் 'சர்தார்'. இப்படத்தை 'இரும்புத் திரை, ஹீரோ' படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்தார். தீபாவளிக்கு வெளியான மற்றொரு படமான சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' படத்தை விடவும் 'சர்தார்' படம் அதிக வசூலைப் பெற்று வணிக ரீதியாக வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது.
அதனால், படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் லட்சுமண் குமார் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். அதன் சாவியை படத்தின் நாயகன் கார்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டார் மித்ரன்.
'சர்தார்' படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் வர வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே படத்தின் நன்றி விழாவில் தெரிவித்திருந்தனர்.