கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
மலையாளத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் ஜோடியாக மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த பிறகு சினிமாவில் தனது எல்லையை விரிவாக்கி வருகிறார் அபர்ணா பாலமுரளி. அந்தவகையில் கன்னடத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னட நடிகரும் இயக்குனருமான ராஜ் பி ஷெட்டி முதன் முறையாக மலையாளத்தில் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி.
இந்த படத்திற்கு ருத்திரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “கோடாரி மறந்துவிடும் மரம் மறக்காது” என்கிற இதன் டேக்லைனே இந்த படம் ஒரு ரிவெஞ்ச் திரில்லர் என்பதை பளிச்சென சொல்கிறது. இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜிஷோ லோன் ஆண்டனி என்பவர் இயக்குகிறார். மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2023ல் துவங்க இருக்கிறது என அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.