‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
சூர்யா நடித்து, தயாரித்த ஜெய்பீம் படத்தில் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் இருளர் இளைஞனாக நடித்தவர் மணிகண்டன். அதற்கு முன்பு விக்ரம் வேதா, காலா படங்களில் நடித்திருந்தார். சில்லுகருப்பட்டி அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்திருந்தார். ஜெய்பீம் வெற்றிக்கு பிறகும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த மணிகண்டன் தற்போது புதிய படம் ஒன்றில் முதன் முறையாக நாயகனாக நடிக்கிறார்.
மணிகண்டனுடன் மீரா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் நடிக்கிறார்கள். ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஒரு இளைஞனுக்கு தூக்கத்தில் சத்தமா குறட்டை விடும் குறைபாடு இருந்தால் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் எப்படி இருக்கும் என்பதை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.