தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

காஞ்சனா படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ், சரத்குமார் இணைந்து நடித்துள்ள படம் ருத்ரன். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை ஒட்டி நேற்றைய தினம் ருத்ரன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. லாரன்ஸின் அதிரடியான ஆக்சன் காட்சிகளாக இடம் பெற்றுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




