ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

சமந்தா நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் யசோதா. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. சிவலெங்கா கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த படத்தை ஹரி, ஹரிஷ் இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். மணிசர்மா இசை அமைத்துள்ளார், எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, தமிழில் சூர்யா, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஹிந்தியில் வருண் தவான் வெளியிட்டனர்.
இந்த டீசரில் யசோதா வாடகை தாய் மோசடி தொடர்பான கதை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏழை வீட்டு பெண்ணான சமந்தா ஒரு கோடீஸ்வர பெண்ணுக்கு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்று கொடுக்கிறார். இது தொடர்பாக வாடகை தாய் குழந்தை பெற ஏற்பாடு செய்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மோசடி செய்து விட அதை எதிர்த்து இன்னொரு சமந்தா போராடுகிற மாதிரியான கதை என்று தெரிகிறது. வாடகை தாயாகவும், அந்த தாய்க்கு பிறந்த குழந்தையாகவும் சமந்தா நடித்திருப்பதை யூகிக்க முடிகிறது. மருத்துவமனையின் உரிமையாளராக வரலட்சுமி சரத்குமார் நெட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பதம் தெரிகிறது.
நயன்தாரா வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்று பரபரப்பு ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த டீசர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




