மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

பான் இந்தியா படங்கள் பெருகி வருவதால் இப்போது சினிமாவில் மொழிகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது. டாப் ஹீரோக்கள் மட்டுமல்லாது அடுத்த வரிசை ஹீரோக்கள் தமிழுக்கு வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் வளரும் இளம் தெலுங்கு நடிகரான சுதீர் பாபு.
ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் இது தயாராகிறது. இது சுதீர் பாபுவின் 18வது படமாகும். தற்போது படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெற்கு மும்பையை சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு கடிதமும், அதில் '' அவசரம்: உங்களது வருகை அவசியமானது'' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்துடன் துப்பாக்கி, தோட்டாக்கள், பழைய ரூபாய் நோட்டு, தொலைபேசி மற்றும் சுருட்டு ஆகியவைகளும் இடம் பெற்றிருக்கிறது.
இதன் கதைக்களம் 1989ம் ஆண்டில் குப்பம் எனும் ஊரில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பட நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.




