பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மதுபானகடை படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர் கமலக்கண்ணன். ஒரு டாஸ்மாக் பாருக்கள் நடக்கும் கதையாக இதனை உருவாக்கி இருந்தார். அதன்பிறகு சிபிராஜ், ஆண்ட்ரியா நடித்த வட்டம் படத்தை இயக்கி இருந்தார். இது அதிக கவனம் பெறவில்லை. இதற்கு இடையில் அவர் இயக்கி உள்ள படம்தான் குரங்கு பெடல். இந்த படம் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருப்பதன் மூலம் கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தை மாண்டேஜ் பிக்சர்ஸ் சவிதா சண்முகம் ,சுமீ பாஸ்கரன், தயாரித்துள்ளனர். இயக்குனர் ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
1980 களின் கோடைகாலத்தில் கத்தேரி என்கிற கிராமத்தில் சைக்கிள் ஓட்டத்தெரியாத ஒரு தகப்பனுக்கும், சைக்கிள் ஓட்டிப் பழகுவதில் ஆர்வமாக இருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான கதையை கொண்டது இந்த படம். சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் காவேரிக்கரையோர பகுதிகளை களமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான இதில் குழந்தைகளுடன் காளி வெங்கட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சுமீ பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.