ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி |
தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்க விஜய் நடித்து வரும் 'வாரிசு' படம் தமிழ், மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது. 2023ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை இரண்டு மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள். 'வாரிசு' படம் நேரடி தமிழ்ப் படம் மட்டும்தான் என சமீபத்தில் அதன் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார். அதாவது, தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுவதாக அர்த்தம். தெலுங்கில் டப்பிங் என்பதை அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
2023 பொங்கலுக்கு தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'ஆதி புருஷ்', பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீர சிம்ம ரெட்டி', சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டர் வீரய்யா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றிற்கு இடையில் விஜய் நடித்துள்ள 'வாரிசுடு' தெலுங்கு படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டின் போது தெலுங்கில் “என்டிஆர் கதாநாயகடு, வினய விதேய ராமா, எப் 2'' ஆகிய படங்கள் வெளிவந்தன. அப்போது ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்த போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி வெளியிட்ட தெலுங்கு வினியோகஸ்தர் அசோக் வல்லபனேனி 'பேட்ட' தெலுங்கு படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்க சிலர் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். பல முறை வேண்டுகோள் விடுத்தும் பட வெளியிட்டிற்கும், தனக்கும் தொல்லை தருவதாக கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டியவர்களில் 'எப் 2' படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜுவும் ஒருவர்.
அப்போது 'பேட்ட' வினியோகஸ்தருக்கு, “நான் யாருக்கும் தொல்லை கொடுக்கவில்லை. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நமது தெலுங்குப் படங்களுக்கு தியேட்டர்கள் வேண்டும். மூன்று தெலுங்குப் படங்களுக்கே தியேட்டர்கள் கொடுக்க முடியவில்லை,” என்று தில் ராஜு பதிலளித்ததாக செய்திகள் வந்தன.
2023 பொங்கலுக்கும் தெலுங்குத் திரையுலகத்தின் மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளிவர உள்ளன. அவற்றிற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். இந்நிலையில் நேரடி தெலுங்கு படங்கள்தான் முக்கியம் என இப்போது தில் ராஜு பேசுவாரா என டோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்களாம். தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகி வர உள்ள 'வாரிசுடு' படத்தையும் அப்போது 'பேட்ட' படத்தை டீல் செய்தது போல இப்போது தனது 'வாரிசுடு' படத்தை டீல் செய்வாரா தில் ராஜு எனக் கேட்கிறார்களாம்.
இதனால், தெலுங்கில் விஜய்யின் 'வாரிசுடு' படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள்.