புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கனடாவில் இருந்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 8 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அதன்பிறகு தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்தார். இதன் ஒரு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படம் கைவிடப்பட்டது. தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'தீ இவன்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலாதேவி தயாரிக்கிறார். கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன், ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி, தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி, இசையமைத்து இயக்குகிறார். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் சன்னி லியோன் ஆடுவது குறித்து டி.எம்.ஜெயமுருகன் கூறியிருப்பதாவது: தமிழ் கலாச்சாரம், குடும்ப உறவுகளை சொல்லும் கதை கொண்ட இந்த படத்தில் " மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் கொண்டாடு தோழி " என்ற பாடலுக்கு ஆடவேண்டும் என்று மும்பையில் சன்னி லியோனை சந்தித்து கேட்டடேன். படத்தின் முழு கதையும் கேட்டுவிட்டு அவர் ஆட சம்மதித்தார். என்கிறார் ஜெயமுருகன்.