ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சென்னை : வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக, நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நேரில் விசாரிக்க, அரசு அமைத்த குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், சென்னையில் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்களே ஆகும் நிலையில், 'நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம்' என, சமூக வலைதள பதிவில், விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
வாடகை தாய் வாயிலாக, நயன்தாரா குழந்தை பெற்றது தெரிய வந்தது. இதில், விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. விசாரணை நடத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர், ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, 2021 டிசம்பரிலேயே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, கடந்த ஆண்டு டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தால், மருத்துவமனை நிர்வாகம், அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வாடகை தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவனிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.