'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

திரையுலகை பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களின் பட ரிலீஸின்போது, பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர்களது ரசிகர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். சில ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி தங்களது அபிமான ஹீரோக்களின் பிறந்தநாளை கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதேசமயம் நடிகைகளுக்கு இதுபோன்று ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது என்பது அரிதான ஒன்றுதான். அந்தவகையில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை அவரே பெருமைப்படும் விதமாக கொண்டாடியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
தெலுங்கானாவை சேர்ந்த சில ரசிகர்கள் பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னதானம் செய்துள்ளனர். அதைவிட ஒருபடி மேலே சென்று 111 பசுக்களுக்கு உணவு அளித்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் பூஜா ஹெக்டேவின் கவனத்திற்கு வர, இந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்ட அவர், “எனது பிறந்தநாளை இந்த விதமாக கொண்டாடியதற்கு நன்றி.. என்னை மிகவும் பெருமைப்படும்படி செய்து விட்டீர்கள்” என்று தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.