இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
'கேஜிஎப் 1, 2' படங்களைத் தயாரிக்க ஹம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்து வரும் படம் 'காந்தாரா'. தமிழில் 'பொன்னியின் செல்வன்', ஹிந்தியில் 'விக்ரம் வேதா' ஆகிய படங்கள் மற்ற மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் வெளியானதால் 'காந்தாரா' படத்தை அப்போது கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் சரியாக வெளியிட முடியவில்லை.
கடந்த வாரம் முதல் கன்னட பதிப்பு கர்நாடகா தவிர பிற மாநிலங்களிலும் வெளியானது. இருப்பினும் படத்தை அந்தந்த மாநில மொழிகளில் ரசிகர்கள் பார்த்தால் வசூல் அதிகம் கிடைக்கும் என திட்டமிட்ட படக்குழுவினர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.
நாளை மறுநாள் அக்டோபர் 14ம் தேதி ஹிந்தியிலும், அக்டோபர் 15ம் தேதி தமிழ், தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். முன்னதாக தமிழில் 16ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். பின்பு மாற்றிவிட்டனர். மலையாள மொழி வெளியீடு பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைப் போலவே மற்ற மொழிகளிலும் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கான டிரைலரை நடிகர் கார்த்தி 3 மணிக்கு வெளியிட்டார்.