பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்து சூப்பர்ஹிட்டான 'லூசிபர்' படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்து கடந்த வாரம் வெளியிட்டனர். நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜா இயக்கிய இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துப் பாராட்டியுள்ளார். அது குறித்த தகவலை நன்றிப் பதிவுடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா. “சூப்பர் ஸ்டார் 'காட்பாதர்' படத்தைப் பார்த்தார். “எக்சலன்ட், வெரி நைஸ், வெரி இன்டரஸ்டிங்,” தெலுங்கிற்காக சில மாற்றங்களைச் செய்ததை தனது விரிவான பாராட்டில் அவர் தெரிவித்திருந்தார். தலைவர் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு நன்றி. எனது வாழ்க்கையில் சிறந்த ஒரு தருணம் இது, நிறைய அர்த்தங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோகன்ராஜாவின் தம்பி ஜெயம் ரவி நடித்து வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்காகவும் ரஜினிகாந்த் ஏற்கெனவே பாராட்டியிருந்தார். அதையும் ஜெயம் ரவி தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்ட பிறகுதான் தெரிய வந்தது. தம்பி, அண்ணன் இருவருக்கும் அடுத்தடுத்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.