'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமையான எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதுக்கு பல பிரிவுகளில் போட்டியிடுகிறது. இதற்காக படம் பற்றிய நிகழ்ச்சிகளுக்காக ராஜமவுலி அமெரிக்கா சென்றுள்ளர். அங்கு ஆர்ஆர்ஆர் படம் பற்றிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆர்ஆர்ஆர் படம் ஹிந்து மதத்தை உயர்த்தி பிடிக்கிறதே என்று கேள்வி எழுப்ப்பட்டது.
அதற்கு ராஜமவுலி அளித்த பதில் வருமாறு: பலரும் ஹிந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். அப்படியல்ல, அது தர்மம், இன்றைய காலக்கட்டத்தில் தான் அது மதம். ஆனால், ஹிந்து மதத்திற்கு முன்பு அது 'ஹிந்து தர்மமாக' இருந்தது. ஹிந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை; அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் ஹிந்து அல்ல.
அதே சமயம் 'ஹிந்து தர்மம்' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர ஹிந்துதான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் ஹிந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் ஹிந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன், இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.




