நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் அறிமுகமான 'குட் பை' படம் கடந்த வாரம் வெளிவந்தது. அப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் முடிந்ததும் ஓய்வெக்க மும்பையிலிருந்தே நேரடியாக மாலத் தீவு சென்றார். அவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சென்றுள்ளதாக அன்றைய விமான நிலைய புகைப்படங்களைப் பகிர்ந்து செய்திகள் வெளிவந்தன. ஆனால், இருவரும் தற்போது அங்கு ஒன்றாகத்தான் தங்கியுள்ளார்களா என்பது குறித்த தகவல் இல்லை.
தங்களுக்குள் காதல் இல்லை என இருவரும் மறுத்த நிலையில் ஒன்றாக ஓய்வெடுக்க மாலத்தீவிற்குச் சென்றது பாலிவுட், டோலிவுட்டில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் விஜய் ஹிந்தியில் அறிமுகமான 'லைகர்' படுதோல்விப் படமாகவும், ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமான 'குட் பை' படம் தோல்விப் படமாகவும்தான் அமைந்துள்ளது. இருப்பினும் இருவரும் மீடியாக்களிடமும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பான நட்சத்திரங்களாக உள்ளனர்.
ராஷ்மிகா மாலத் தீவில் அவர் தங்கியுள்ள ரிசார்ட்டிலிருந்து புகைப்படங்களைப் பதிவிட ஆரம்பித்துவிட்டார். மாலத் தீவு சென்றாலே இப்படி இன்ஸ்டாகிராம்ல் புகைப்படங்களைப் பதிவிடுது வழக்கம். அவர் வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களுக்கும் 30 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் பதிவிட்டால் அது ஒரு கோடி லைக்குகளைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.