'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் கவனம் பெறாத அவர், கடந்த வருடம் நவரசா என்கிற ஆந்தாலாஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான தங்கம் என்கிற குறும்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார். அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் படத்தில் கமலின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் அதிக ரசிகர்களை சென்றடைந்துள்ளார்.
இது ஒரு பக்கமிருக்க இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த காளிதாஸ் சமீபகாலமாக கேரள மாடல் அழகியான தாரிணி காளிங்கராயர் என்பவருடன் நெருக்கமான நட்பு பாராட்டி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பத்தினருடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினார் காளிதாஸ் ஜெயராம்.
அப்போதே யார் இந்த பெண் என ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் தற்போது தாரிணியுடன் சேர்ந்து துபாயில் டேட்டிங் செய்து வருகிறார் காளிதாஸ் ஜெயராம். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள காளிதாஸ் இதன்மூலம் கிட்டத்தட்ட தாரிணியுடனான தனது காதலை சூசகமாக உறுதிப்படுத்தி விட்டார் என்று சொல்லலாம்.