‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

நடிகர் பஹத் பாசில் கடந்த ஆண்டில் தெலுங்கில் புஷ்பா, இந்தாண்டு தமிழில் வெளியான விக்ரம் என இரண்டு படங்களிலும் வித்தியாசமான நடிப்பை தந்து தென்னிந்திய மொழி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகராக மாறிவிட்டார். இந்தநிலையில் அவர் கன்னடத்திலும் முதன்முதலாக கால் பதிக்கிறார். கன்னட இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார்.
கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியாகி பஹத் பாசிலுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் அபர்ணா பாலமுரளி. அந்த வகையில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது இவர்கள் மீண்டும் கன்னடப் படத்துக்காக இணைய உள்ளனர். கன்னடத்தில் மட்டுமல்லாது மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளில் இந்தப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 9ம் தேதி துவங்க இருக்கிறது.