எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' |
பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களின் பாணியில் அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் படம் மஞ்சக்குருவி. இதில் அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீரஜா நடித்துள்ளார். வில்லனாக 'குங்பூ மாஸ்டர்' ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். சௌந்தர்யன் இசையமைத்துள்ளார். ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கிறார்.
அரங்கன் சின்னத்தம்பி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் படம். கிஷோர் இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். அண்ணன் தங்கை மீது வெறும் பாசத்தை காட்டினால் போதாதது அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் படம். அண்ணன், தங்கை செண்டிமென்ட் படங்கள் எப்போதும் வெற்றி பெறும். அந்த வரிசையில் இந்த படமும் மக்களிடம் வரவேற்பை பெறும். என்கிறார்.