2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கன்னடத்தில் அறிமுகமாகும் வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க நினைக்கிறார்கள். கர்நாடகாவின் பிரபல அரசியல்வாதி திலக்ராஜ் பல்லாலின் மகன் ஜாயித் கான் பனாரஸ் என்ற படத்தில் அறிமுகமாகிறார், இந்த படம் அதே பெயரில் தமிழிலும் வெளிவருகிறது. இதேபோல தற்போது இன்னொரு வாரிசும் தமிழுக்கு வருகிறார்.
கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி, ‛ஜூனியர்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் கிரீட்டியுடன், ரவிச்சந்திரன், ஜெனிலியா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாகுபலி புகழ் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.தெலுங்கின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வாராஹி பிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கிறது.