ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
புதுமுக இயக்குநர் எம்.ஆர் மாதவன் இயக்கும் படம் ‛டைனோசர்'. இந்தப் படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய்பிரியா, யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் சீனிவாஸ் சம்பந்தம் தயாரிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.மாதவன் கூறியதாவது : இது ஒரு கேங்ஸ்டர் கதை. இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள் தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 'டைனோசர்ஸ்' என்று ஏன் வைத்திருக்கிறோம் என்பது படம் பார்க்கும் போது புரியும். படத்தின் கதைக்களமும் பின்புலமும் பிரமாண்ட தன்மை கொண்டவை. இப்படத்தில் 120 பேர் வசனங்கள் பேசி நடித்து இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் புதுமையான சித்தரிப்பின் மூலம் மனதில் நிற்கும் படியான பாத்திரங்களாக அமைத்துள்ளோம். படத்தில் இசை அமைப்பாளர் தேவா நீண்ட இடைவெளிக்கு பிறகு கானா பாடல் ஒன்றை பாடி உள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. என்கிறார் மாதவன்.