2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பாலிவுட் நடிகை சோனல் சவுகான் தற்போது தி கோஸ்ட் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனாவுடன் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளிவருகிறது. ஏற்கெனவே ரெயின்போ, லெஜண்ட், டிக்டேட்டர், ரூலர் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தி கோஸ்ட் படத்தில் நடித்து இருப்பது குறித்து அவர் கூறியதாவது: தி கோஸ்ட் படம் மிகவும் சுவாரஸ்யமான பயணம். இயக்குனர் பிரவீன் சத்தாருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. அவர் தெளிவான பார்வை கொண்டவர். படப்பிடிப்பிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் கதையையும் எனது கேரக்டரையும் தெளிவாக கூறிவிட்டார் அதனால் அதற்கு நான் தயாராகவே படப்பிடிப்புக்கு சென்றேன். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு படம். நான் சம்பந்தப்பட்ட இரண்டு பெரிய ஆக்ஷன் பிளாக்ஸ் படத்தில் இருக்கிறது.
இப்படத்தில் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறேன். இந்த கேரக்டர் நான் நடித்ததிலேயே உடல் ரீதியாக மிகவும் சவாலான கதாபாத்திரம். இதற்காக 3 மாதம் பயிற்சி எடுத்தபோது எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதுகூட வலிக்கவில்லை. 6 மாதம் எந்த பயிற்சியும் எடுக்க கூடாது என்று டாக்டர்கள் சொன்னது தான் வலித்தது.
எனது தந்தை போலீஸ் அதிகாரி என்பதால் அவரது மேனரிசத்தை இந்த படத்தில் பயன்படுத்திக் கொண்டேன். முதன் முதலாக ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தி கோஸ்ட் என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.