ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் | விவாகரத்து பெற்றுவிட்டேன் : வெளிப்படையாக அறிவித்த மம்முட்டி பட பெண் இயக்குனர் | லூசிபர் 3ம் பாகத்தின் டைட்டில் இதுதான் : இசையமைப்பாளர் சூசக தகவல் | நான் யார் என்று எனக்கே தெரியவில்லை : மணிரத்னம் பட நடிகை அதிர்ச்சி தகவல் | இரண்டு நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை ; கைதான பெண் வாக்குமூலம் | ‛இளமை எனும் பூங்காற்று...' புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார் | 'எம்புரான்' தயாரிப்பாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை |
கிரிக்கெட், கால்பந்து, கைபந்து, கபடி, குத்துச் சண்டை இவற்றை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. முதன் முறையாக ஸ்னூக்கர் விளையாட்டை மையப்படுத்தி சஞ்ஜீவன் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளது. ஸ்னூக்கர் என்றால் ஒரு அகன்ற மேஜையில் சிறிய பந்து வடிவிலான காய்களை வைத்து அதனை ஒரு குச்சியின் உதவியால் இன்னொரு காயை கொண்டு இலக்கில் வீழ்த்தும் விளையாட்டு, அந்தக் கால படங்களில் வில்லன்கள் இந்த விளையாட்டை விளையாடுவார்கள்.
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கி உள்ளார். வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் படம் உருவாகியுள்ளது.
படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது: நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன். ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பணம் வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று தான் இதுவும் ஒரு விளையாட்டு.
இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். ஒரு படம் என்றால் அது ஒரு ஜானரை மையமாக வைத்துக் கொண்டு அதனை உருவாக்குவார்கள். இந்த படத்தில் ரசிகர்கள் அனைத்து விதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம். இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும். அக்டோபர் 14ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. என்றார்.