டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரபல ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகையாக மட்டுமல்லாது இயக்குனராக, தயாரிப்பாளராகவும் இவர் முத்திரை பதித்துள்ளார்.
இந்திய சினிமாவின் தந்தையாக கருதப்படும் தாத சாகேப் பால்கேவின் நினைவாக திரைத்துறையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இதற்கு முன் இந்த விருதை பிருத்விராஜ் கபூர், எல்.வி.பிரசாத், சத்யஜித் ரே, நாகிரெட்டி, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், திலீப் குமார், ராஜ்குமார், டி.ராமநாயுடு, கே.விஸ்வநாத், சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏகப்பட்ட கலைஞர்கள் வென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த விருது நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பிறந்த ஆஷா பரேக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். பிறகு 1959ல் ‛தில் தேக்கே தேகோ' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கன்காட், ஜப் பியார் கிசி சே ஹோதா ஹே, சய்யா, மெரி சூரத் தெறி ஆங்கன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஹிட் பட நாயகியாகவும், 1960-70 காலக்கட்டத்தில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வந்தார். ஹிந்தி மட்டுமல்லாது பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்த இவர் இந்திய திரைப்பட துறையின் தணிக்கை குழுவில் முதல் பெண் தலைவராக பதவி வகித்துள்ளார். இப்படி சினிமாவில் பல துறைகளில் சாதித்த ஆஷா பரேக்கிற்கு கடந்த 1992ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இப்போது மற்றுமொரு கவுரவமாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.