மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் ரெண்டு ராஜா பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பார்க்கையில், தனுஷின் இரண்டு கதாபாத்திரம் குறித்து விரிவாக பேசுவது போல் புரியும். இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். தனுஷோடு இணைந்து யுவன் ஷங்கர் ராஜாவும் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலில் வரும் "அரக்கன் ஒருவன் இல்லையென்றால்...இறைவன் மகிமை புரியாது" வரும் வரிகள் பலரது கவனத்தை ஈர்த்து இருக்குது. இப்படம் வருகிற 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.