7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி  25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனது 25 வருட இசை பயணத்தை வெளிநாடுகள் மற்றும் இந்தியா என இசைக் கச்சேரிகளை நடத்தி கொண்டாடி வருகிறார். சமீபத்தில் யுவன் 25 நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யுவன் சங்கர் ராஜாவை வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில், கார்த்தி, ஜி.வி.பிரகாஷ், அமீர், செல்வராகவன், லிங்குசாமி,  வசந்த், விஜய், பா.இரஞ்சித், பிரபு சாலமன், தியாகராஜன் குமாரராஜா, ஹரிஷ் கல்யாண், டி.இமான், சந்தோஷ் நாராயணன், தேவி ஸ்ரீ பிரசாத், ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆண்ட்ரியா, தீ, அதிதி ஷங்கர், எஸ்.பி.பி,சரண், ஏ.ஆர்.அமீன், சினேகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதி நாளை காலை 10 மணிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.