கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் |
ஹாட் மாடலான தர்ஷா குப்தா சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்த போதே சமூகவலைதளத்தில் கவர்ச்சி காட்டி கலக்கி வந்தார். இதன்மூலம் சில படங்களில் அடுத்தடுத்து கமிட்டான தர்ஷா குப்தா சின்னத்திரையில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார். அதேசமயம் அவர் கமிட்டான ப்ராஜெக்ட்டுகளை தாண்டி புதிய ப்ராஜெக்ட்டுகள் எதுவும் கிடைக்காததால் மீண்டும் க்ளாமர் மோடுக்கு கம்பேக் கொடுத்து தொடர்ச்சியாக போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது புதிய படமொன்றில் பிரபல நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரத் 16 ஆண்டுகளுக்கு பின் வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் தான் தர்ஷா குப்தா பரத்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிய வருகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், நடிகர் பரத்தின் ரசிகர்கள் தங்களது பேன் பேஜில் பரத் மற்றும் தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை இணைத்து நியூ ஜோடி கம்மிங் சூன் என பதிவிட்டுள்ளனர். அந்த பதிவை நடிகை தர்ஷா குப்தாவும் ஷேர் செய்துள்ளார். மேலும், நடிகர் பரத்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தையும் டைம்லைனில் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் பரத்துடன் நடிப்பது உண்மை தான் என தெரியவருகிறது. இதுவரை சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வந்த தர்ஷாவிற்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்பதால் தர்ஷாவின் ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவரை வாழ்த்தி வருகின்றனர்.