'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61வது படத்திற்கு ‛துணிவு' என்று பெயரிட்டுள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியானது. அதில் ஒரு சேரில் ஸ்டைலாக அமர்ந்துள்ள அஜித் கையில் துப்பாக்கி உடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கொண்டாட்டமே இன்னும் முடியவில்லை. அதற்குள் இன்று படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதிலும் அஜித் மாஸான லுக்கில் ஸ்டைலாக உள்ளார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
துணிவு படம் வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒருகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற உள்ளது. அங்கு மாஸான ஆக் ஷன் காட்சி எடுக்கப்பட உள்ளது. அதோடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியும் என தெரிகிறது. பொங்கலுக்கு படம் வெளியாக வாய்ப்புள்ளது.