சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் ‛ஏகே 61'. நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகி வரும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுநாள் வரை படத்திற்கான தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது.
கடந்த சில நாட்களாக 'ஏகே 61' அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர். படத்திற்கு துணிவே துணை, துணிவு ஆகியவற்றில் ஒன்றை வைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று(செப்., 21) மாலை படத்தின் தலைப்பை அறிவித்தனர். அதன்படி படத்திற்கு ‛துணிவு' என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். போஸ்டரில் அஜித் ஒரு சேரில் சாயந்த படி கையில் துப்பாக்கி உடன் உள்ளார். தலைப்பிற்கு கீழே கேப்ஷனாக No guts no glory என குறிப்பிட்டுள்ளனர். அதாவது ‛துணிவு இல்லை என்றால் மகிமை அல்லது புகழ் இல்லை' என்பது அதன் பொருள். முன்னதாக நேற்று மாலை முதலே படத்தின் தலைப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர். துணிவு என தலைப்பு வந்ததும் ரசிகர்கள் அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர்.




