ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. சங்கத் தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தியேட்டர்களின் டிக்கெட் விற்பனையை தமிழக அரசு ஆன்லைன் மூலம் கண்காணிக்க வேண்டும்.
* டிஜிட்டல் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்,
* தயாரிப்பாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மானியத் தொகையை ரூ.7 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டும்.
* பையனூர் திரைப்பட நகரில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தரவேண்டும்.
* முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி திரைத்துறை வாரியம்' என்ற பெயரில் வாரியம் அமைக்க வேண்டும்.
* தயாரிப்பாளர் சங்கத்திற்கு சொந்தமாக அலுவலகம் கட்டிக் கொள்ள சென்னையில் இடம் ஒதுக்கித் தரவேண்டும்.
* படம் வெளியான 3 நாட்களுக்கு பிறகே சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வெளியிடப்பட வேண்டும்.
* படம் பார்த்து விட்டு திரும்பும் ரசிகர்களிடம் படம் பற்றி கருத்து கேட்கும் மீடியாக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க கூடாது .
* தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்களுக்கு திரைத்துறையினர் பேட்டி தரக்கூடாது.
* படப்பிடிப்பை அடிக்கடி நிறுத்தி பிரச்சினை செய்யும் லைட்மேன் சங்கத்தை பெப்சி கட்டுப்படுத்த வேண்டும்.
* இனி இரண்டு படங்கள் தயாரித்து அதனை குறைந்தபட்சம் 25 தியேட்டர்களில் வெளியிட்டவர்கள் மட்டுமே சங்கத்தின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
* தயாரிப்பளர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
* குறைந்தபட்சம் 2 முறை செயற்குழு உறுப்பினர்களாக பணியாற்றிவர்கள்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும்.
* சங்கத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க தனியாக குழு அமைக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.