கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் ஒரு நடன இயக்குனராக முதலில் அறிமுகமான இவர் பின்னர் நகைச்சுவை நடிகராக மாறி, தற்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். குறிப்பாக வினித் சீனிவாசன், நிவின்பாலி ஆகியோரின் கூட்டணியில் இவரும் ஒரு முக்கியமான நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் கவுதம் மேனன் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகியுள்ள நீரஜ் மாதவ், இந்தப்படத்தில் ஒரு ராப் பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மேடையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் அந்த பாடலை பாடி அசத்தியுள்ளார் நீரஜ் மாதவ். இது பற்றிய தகவல்கள் பெரிய அளவில் வெளியே தெரியாத நிலையில், தற்போது படம் வெளியாகி உள்ளதை தொடர்ந்து இந்தப்பாடல் உருவான போது கவுதம் மேனன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோருடன் தான் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நீரஜ் மாதவ்.
“தமிழில் நடிகராக மட்டுமல்ல முதல் படத்திலேயே ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடகராகவும் அறிமுகமானது மிகப்பெரிய மகிழ்ச்சி.. கனவு நனவான தருணம் இது” என்று கூறியுள்ள நீரஜ் மாதவ், இந்தப் பாடலை வெந்து தணிந்தது காடு படத்தின் மலையாள வெர்ஷனுக்காக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..




