ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ர்ரம், பிரபு மற்றும் பலர் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் டீசர் நேற்று தமிழ், தெலுங்கு மொழிகளில் யு டியூபில் வெளியானது.
“காதல் கொண்டேன், புதுப்பேட்டை” படங்களுக்குப் பிறகு 16 வருடங்கள் கழித்து செல்வராகவன், யுவன், தனுஷ் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப் படம் மூலம் இணைந்துள்ளது. அதனால், இப்படம் பற்றி ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.
நேற்றைய டீசரைப் பார்க்கும் போது தனுஷ் இரு வேடங்களில் நடிப்பது, அதில் ஒரு தனுஷ் சைக்கோ வில்லன், மற்றொரு தனுஷ் நாயகன் என்றும் மட்டும் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது யு-டியூப் டிரென்டிங்கில் தமிழ் டீசர் முதலிடத்தில் உள்ளது. டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாக 27 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கில் 7 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
இப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. ஆனாலும், டீசரில் பட வெளியீட்டுத் தேதி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.