பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'லைகர்' படம் எதிர்பாராத விதமாக படுதோல்வியைத் தழுவியது. மற்ற மொழிகளில் அப்படியிருந்தாலும் தெலுங்கில் மட்டுமாவது தப்பிக்காதா என எதிர்பார்த்தார்கள். விஜய் தேவரகொண்டாவின் முந்தைய சில மோசமான படங்களை விடவும் இந்தப் படம் மோசமாக வசூலித்தது. சீக்கிரமே தியேட்டர்களை விட்டும் தூக்கப்பட்டது.
படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்கள் நஷ்டத் தொகையைக் கேட்டு வருகிறார்களாம். ஆனால், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக சார்மி கவுர் தர மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தை சந்தித்து தங்கள் பிரச்சினையை வினியோகஸ்தர்கள் பேச உள்ளார்களாம். அதிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் தெலுங்கு சேம்பரில் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.