அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, ஷிவாங்கி நடித்துள்ள படம் ‛ஷாட் பூட் த்ரீ'. கைலாஷ் ஹீத், சூப்பர் சிங்கர் ப்ரணிதி, வேதாந்த் மற்றும் 'மாஸ்டர்க் புகழ் பூவையார் உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களுடன் கோல்டன் ரெட்ரீவர்க் வகை நாய் மேக்ஸ் நடித்துள்ளது. ராஜேஷ் வைத்யா இசையமைத்திருக்கிறார். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்திற்கு தென் கொரியாவில் நடக்க இருக்கும் சர்வதேச விலங்குள் பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் ஷாட் பூட் த்ரீ படம் திரையிடப்பட்டு விருதும் வழங்கப்பட இருக்கிறது. இந்த படம் ஒரு குடும்பத்திற்கும் அந்த குடும்பத்தாரால் வளர்க்கப்படும் ஒரு நாய்க்கும் உள்ள உறவைப் பற்றியதாகும்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் கூறியதாவது: இந்த செய்தியை கேட்டு நானும், எனது குழுவும் மிக மகிழ்ச்சி அடைந்தோம். ஷாட் பூட் த்ரீ, எழுத ஆரம்பத்தில் இருந்து திரைப்படமாக எடுத்து முடிக்கும் வரை, எங்களுக்குப் பல ஆச்சர்யங்களைத் தந்துள்ளது. இந்தப் படம் வெளியாவற்கு முன்பே, எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மேலும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது, என்றார்.