3 மணி நேரம் ஓடப் போகும் 'சலார்' | ஒரே நாளில் இரண்டு 'சர்ப்ரைஸ்' கொடுத்த சமந்தா | பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு |
பிளாக் ஷீப் என்கிற இணையதள சேனலில் யூ-டியூபராக இருந்து பின்னர் சின்னத்திரை தொகுப்பாளராகி, சினிமாவில் காமெடி நடிகர் ஆனவர் விக்னேஷ்காந்த். மீசைய முறுக்கு, தேவ், நட்பே துணை, மெஹந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, களவாணி 2 மற்றும் இக்லூ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விக்னேஷ்காந்திற்கும் என்ஜினீயர் ராஜாத்திக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ராஜாத்தி விக்னேஷ்காந்தின் உறவுப் பெண். இது பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம். இந்த நிலையில் நேற்று திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் விக்னேஷ்காந்த், ராஜாத்தி திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
விக்னேஷ்காந்தின் நெருங்கிய நண்பர் மற்றும் பக்கத்து ஊர்காரர் நடிகர் சிவகார்த்திகேயன். அதனால் சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி சென்று திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த விக்னேஷ் திட்டமிட்டிருக்கிறார்.