விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
வில்லன் மற்றும் குணசித்ர நடிகர் சண்முகராஜின் தம்பி முனீஸ் ராஜா. நாதஸ்வரம் என்கிற தொலைக்காட்சி தொடர் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். அந்த தொடர் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. அதன்பிறகு முள்ளும் மலரும் தொடரில் நாயகனாக நடித்தார். அதன்மூலம் தேவராட்டம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்தார்.
இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் முனீஸ் ராஜா இருவரும் முகநூல் நண்பர்களாக அறிமுகமாகி பின்னர் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்திலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
தற்போது முனீஸ்ராஜா குடும்பத்தில் காதலையும், கல்யாணத்தையும் ஏற்றுக் கொண்டதாகவும், ராஜ்கிரண் குடும்பத்தில் இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் நட்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் இதுவரை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் இது சின்னத்திரை சீரியலுக்கான பரபரப்பு விளம்பரமாக இருக்குமோ என்றுதான் எல்லோரும் கருதினார்கள். ஆனால் இப்போது அது உண்மை தான் என்பது உறுதியாகி உள்ளது.
முனீஸ் பேட்டி
இதனிடையே தங்கள் திருமணம் குறித்து முனீஸ் வெளியிட்ட வீடியோவில், ‛‛நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் பற்றி சில தவறான செய்திகள் வருகின்றன. கூடிய விரைவில் எங்கள் குடும்பத்தாரின் சம்மதத்துடன், பத்திரிக்கை எல்லாம் அடித்து விரைவில் திருமண வரவேற்புக்கு அழைக்கிறேன். இந்த செய்தி கேட்டு எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி'' என்றார்.