‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் பவன் கல்யாணின் பிறந்தநாள் சமீபத்தில் அவர்களது அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அவர் பல வருடங்களுக்கு முன் நடித்த நடித்த ஹிட் படமான ஜல்சா, சில தியேட்டர்களில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. அதேசமயம் விஜயவாடாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் கொண்டாட்டம் என்கிற பெயரில் ரசிகர்கள் திரையைக் கிழித்து நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இருக்கைகளில் உள்ள பஞ்சு பிய்த்தெறியப்பட்டு, பல நாற்காலிகள் அடித்து உடைக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. மேலும் பல மதுபான பாட்டில்களும் தியேட்டருக்குள் கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அந்த தியேட்டரில் இனி படங்கள் திரையிட முடியாது முடியாத நிலை உருவாகி உள்ளது.
அதுமட்டுமல்ல தியேட்டரை மீண்டும் சீர்செய்ய குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் அதற்கு ஒருமாத காலம் பிடிக்கும் என்றும் அந்த தியேட்டர் மேலாளர் சோசியல் மீடியா பக்கத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். உங்களது மூன்று மணி நேர கொண்டாட்டத்திற்காக எங்களது ஒரு மாத வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே.. இதைத்தான் உங்கள் ஹீரோ உங்களுக்கு சொல்லித் தந்தாரா என்று ஆதங்கத்துடன் கேள்வியும் எழுப்பியுள்ளார் அந்த நிர்வாகி.